'புக் நவ், பே லேட்டர்' சேவை அறிமுகம்: இந்திய ரயில்வே அதிரடி! | Indian Railways has introduced a new facility to book Tatkal tickets

வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (03/08/2017)

கடைசி தொடர்பு:18:44 (03/08/2017)

'புக் நவ், பே லேட்டர்' சேவை அறிமுகம்: இந்திய ரயில்வே அதிரடி!

ரயில் டிக்கெட் புக்கிங் சேவையில் இந்திய ரயில்வே புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி ரயில் பயணிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரயில் டிக்கெட் புக்கிங் என்பதை மேலும் எளிமையாக்கவும் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சேவை

பயணிகள் தங்கள் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் புக் செய்துவிட்டு பின்னர் பொறுமையாக அதற்கான கட்டணத்தைச் செலுத்திக்கொள்ளும் 'புக் நவ், பே லேட்டர்' என்ற வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி டிக்கெட் புக் செய்து அடுத்த 14 நாள்களுக்குள் அந்தக் கட்டணத்தைச் செலுத்தினால் போதுமானது. இந்தச் சேவைக்கு 3.5 சதவிகித சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும். 

அப்படி 14 நாள்களுக்குள் கட்டணம் செலுத்தத் தவறினால் ஆண்டு அடிப்படையில் டிக்கெட் கட்டணத்துக்கு 36 சதவிகிதம் வட்டியும் சேர்த்து கட்ட வேண்டியிருக்கும். மேலும், கட்டணம் செலுத்தத் தவறியவரின் டிக்கெட் புக்கிங் அக்கவுன்ட் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க