Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'திருப்பாச்சி' ஸ்டைலில் பெண்களின் முடியைத் திருடும் அதிர்ச்சி சம்பவம்! 

'திருப்பாச்சி' படத்தில், விஜய் தனது தங்கைக்குப் பிடிக்காத பெண்ணுக்கு நீளமான முடி இருப்பதைப் பார்த்துவிட்டு, இரவோடு இரவாகச் சென்று ஜடையைக் கத்தரித்துவிடுவார். அவர் படத்தில் செய்த வேலையை, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலத்தில் யாரோ செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

முடி, ராஜஸ்தான்


கடந்த ஜூன் மாதத்தின் ஆரம்பத்தில், ராஜஸ்தானில் பெண்களுடைய தலை முடியைத் திருடும் சம்பவங்கள்குறித்த புகார்கள் முதன் முதலில் ஆரம்பித்தது. அதில், 13 வயதான ஈஷா மற்றும் 14 வயதான நேஹா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) முதன் முறையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஜூலை முதல் வாரத்தில், ஜோத்பூருக்கும் பிகானருக்கும் அருகில் குறைந்தபட்சம் 12 வழக்குகள் பதிவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுபோன்ற சம்பவம், ஜூலை மாதத்தின் இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் அருகிலுள்ள ஹரியானாவிலும் ஆரம்பித்தது. ராஜஸ்தானை அடுத்து, சுமார் ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர், ஹரியானா மட்டுமன்றி பல இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தன. ஹரியானாவில் மட்டும் குறைந்த பட்சம் ஐந்து சம்பவங்கள் பதிவாகின. இப்போது, 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதை யார் செய்தார்கள் என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியவில்லை. அரசும் போலீஸாரும் செய்வதறியாமல் தவித்துவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement