2,000 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர்கள்... மனதைப் பதறவைக்கும் வீடியோ!

காராஷ்டிராவிலுள்ள சிந்துதுர்க் மாவட்டம் அம்போலி காட் வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் இரண்டு பேர், 2,000 அடி பள்ளத்தாக்கில் விழுந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

மது போதை

கோலாப்பூரிலிருந்து சுற்றுலாவுக்காகச் சென்றிருந்த ஏழு நண்பர்களில் இம்ரான் காடி, பிரதாப் ரதோடி ஆகிய இரண்டு வாலிபர்களும் 2,000 அடி ஆழமுள்ள கவாலே சாத் பாய்ன்ட் பள்ளத்தாக்கின் மேலுள்ள பாலத்தில் நின்றுகொண்டு மது அருந்தியிருக்கிறார்கள். போதையில் இருவரும் பாலத்தின் தடுப்பின் ஒருபுறமுள்ள நீரில் குதித்து விளையாடியிருக்கிறார்கள். ஆனால்,  சிறிது நேரத்திலேயே தடுப்புக் கம்பியின் மேலேறி தண்ணீரில் குதிப்பதாக நினைத்து, தடுப்புச் சுவருக்கு அப்பாலுள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டார்கள். அந்தப் பகுதியிலிருந்த ஒருவர், இதை வீடியோ எடுத்து வலைதளத்தில் வெளியிட்ட பிறகுதான், உடன் வந்திருந்த நண்பர்களுக்கும் இந்த விவரமே தெரிய வந்திருக்கிறது.

 

 

 

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்லும்போது மதுபாட்டில்களை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை என்ற பல அறிவிப்புப் பலகைகள் சுற்றுலாத் துறையால் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், சில இளைஞர்கள் அத்துமீறும்போது இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. இனியாவது சுற்றுலா செல்லும் இளைஞர்கள் விழிப்போடு இருக்கட்டும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!