Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோவா கடற்கரையில் இனி இவர்களுக்கு அனுமதி கிடையாதாம்!

பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கும் கோவா மாநிலத்தின் கடற்கரையில், 'இனி பிச்சைக்காரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 'கடற்கரையைச் சுத்தம் செய்யும்' திட்டத்தின் ஒரு அங்கமாக, இந்தப் புது நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளதாம். 

கோவா கடற்கரை

சில மாதங்களுக்கு முன்னர் கோவாவில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, கூட்டணி அமைத்து பா.ஜ.க ஆட்சி அரியணையில் அமர்ந்தது. இதையடுத்து, ராணுவத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், கோவாவின் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, மத்திய அரசின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல திட்டங்களை கோவா மாநிலம் மும்முரமாக அமல்படுத்திவருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது, சுற்றுலாவுக்கு மிகவும் பெயர்பெற்ற கோவா கடற்கரைகளில் இனி பிச்சைக்காரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா அமைச்சர்

இதுகுறித்து மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் அஜ்கோன்கர் கூறுகையில், 'இனி கோவா கடற்கரையில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதுமட்டுமன்றி, கடற்கரையில் காலி பாட்டில்களைத் தூக்கிஎறிபவர்கள் மீதும் சட்டவிரோதமாக கடை அமைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement