இறப்புக்கும் இனி ஆதார்: மத்திய அரசு அறிவிப்பு!

அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல் செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்தது மத்திய அரசு. இதற்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார்


இதனிடையே, "தனிநபர் உரிமை என்பது முழுமுற்றானதல்ல, குடிமக்கள் மீது அரசு நியாயமாக ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளைத் தனிமனித சுதந்திரம் என்பது தடுக்க முடியாது. எனவே, ‘தனியுரிமை’ என்பதற்கு நன்கு விளக்கமளிக்கக்கூடிய உருவமோ வடிவமோ கிடையாது" என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

ஆதார் எண்ணுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மக்களின் தனிநபர் விவரங்கள் ஹேக் செய்யப்பட்டு லீக் ஆன செய்தி சமீபத்தில் வெளியானது. இதைக் கருத்தில்கொண்டு ஆதார் தகவல்களைப் பாதுகாக்க 'தகவல் பாதுகாப்புச் சட்டம்' என்ற சட்டத்தை உருவாக்க அரசு முன்வந்துள்ளது. இந்நிலையில், ஒருவரின் இறப்பைப் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்பைப் பதிவு செய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!