இந்தி நடிகர் திலீப்குமார் கவலைக்கிடம்!

நடிகர் திலீப்குமார்


டல்நிலைக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திலீப்குமார் கவலைக்கிடமாக இருக்கிறார்.

இன்றைய பாகிஸ்தானில் 1922-ம் ஆண்டு பிறந்த யூசுப்கான், இளமைப் பருவத்தில் ஒரு கேன்டீனில் வேலை பார்த்துவந்தார். நடிப்பில் அதீத ஆர்வம் கொண்டவர், திலீப் குமார் எனப் பெயர் மாற்றம் செய்துகொண்டு 1944-ம் ஆண்டு முதல் ஹீரோவாக இந்திப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். தேவதாஸ், மதுமதி, கங்கா ஜமுனா, லீடர், ராம் அவுர் ஷ்யாம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து காதல் மன்னனாக தேசிய அளவில் புகழ்பெற்றார். 1950, 60-களில் இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த இவர், 1994-ம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருதையும், 2015-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதையும் பெற்றுள்ளார். 1998-ம் ஆண்டு 'குயிலா' என்ற திரைப்படத்தில் நடித்தபின், திரையுலகிலிருந்து விலகியிருக்கிறார். 

வயோதிகத்தின் காரணமாக அடிக்கடி உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டு, வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தவர் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டதால், உடனடியாக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். திலீப்குமார், கிட்னி பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தாலும், திலீப்குமார் கவலைக்கிடமாக இருப்பதாகவே கூறப்படுகிறது. 94 வயதாகும் திலீப்குமாரை, அவரது இரண்டாவது மனைவி சாய்ரா பானு உடனிருந்து கவனித்துவருகிறார். இவர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக ஐந்து ஆண்டுகள் பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!