புற்றுநோய் சிகிச்சை பாலிசியை அறிமுகம் செய்த எஸ்பிஐ!

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் வகையில் சம்பூர்ண கேன்சர் சுரஷா (sampoorn cancer suraksha) என்னும்  திட்டத்தை எஸ்பிஐ ஆயுள் காப்பீடு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சென்னையில் இத்திட்டம் ஆகஸ்டு 1-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

sbi life
 
 

எஸ்.பி.ஐ-யின் சம்பூர்ண கேன்சர் சுரஷா திட்டத்தில் 6 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் சேர முடியும்.  வரும் நாள்களில் புற்றுநோய் அதிகம் இருக்கும் இரண்டாவது நாடாக இந்தியா இருக்கும் என்று எஸ்பிஐ குறிப்பிட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு இந்த காப்பீடு பயனுள்ளாதாக இருக்கும் என எஸ்பிஐ தெரிவித்துள்ளது.  குறைந்தபட்ச காப்பீட்டுத் தொகை 10 லட்சம் ரூபாய். அதிகபட்ச காப்பீட்டுத் தொகை 50 லட்சம் ரூபாய். 5 ஆண்டு முதல் 30 ஆண்டு வரை பாலிசி காலத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம்.

சம்பூர்ண கேன்சர் சுரஷா பாலிசிதாரர்கள்  புற்றுநோயின் தீவிர கட்டத்தில் பரிசோதனைகளை மேற்கொள்ள எஸ்பிஐ-யின் காப்பீட்டுத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் மாதந்தோறும் மூன்று ஆண்டுகளுக்கு அளிக்கும் வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!