Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இன்று துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்..!

துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. 

கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில், பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் வெற்றிபெற்றார். கடந்த மாதம் 25-ம் தேதி, ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார். இந்நிலையில், தற்போதைய துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி, புதிய துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வகையில் வேட்புமனுத் தாக்கல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் இந்தியத் தேர்தல் ஆணையம் நடத்திமுடித்துள்ளது. 


பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் வெங்கைய நாயுடுவும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில், கோபாலகிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் 58 எம்.பி-க்கள் பலத்துடன் காங்கிரஸ் கட்சி முதலிடத்திலும், பா.ஜ.க. 56 எம்.பி-க்களுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இருப்பினும் பாரதிய ஜனதா வேட்பாளருக்கு, அதன் பல கூட்டணிக் கட்சிகளின் ஆதரவால் பலம் கூடும் என்பதால், அவருக்கே அதிக ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க கூட்டணி வேட்பாளரான வெங்கைய நாயுடுவுக்கு, மக்களவையில் 337 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையில் 80 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement