Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’இதற்கு’ மட்டும் ஆதார் அவசியம் இல்லையாம்..!

இறப்பைப் பதிவுசெய்வதற்கு ஆதார் அவசியம் என்று அறிவித்த மத்திய அரசு, இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை எனப் புதிய விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.

ஆதார்

அடிப்படை வசதிகள் அனைத்துக்கும் ஆதார் அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துவருகிறது. குறிப்பாக, பான் கார்டு பெறுவதற்கு மற்றும் வருமான வரி தாக்கல்செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் நடைமுறையை முன்மொழிந்தது மத்திய அரசு. இதற்கு, ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'ஒருவரின் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம்' என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1-ம் தேதி முதல் இறப்பைப் பதிவுசெய்ய ஆதார் கட்டாயம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பான அறிவிப்பை ஆகஸ்ட் 4-ம் தேதி உள்துறை அமைச்சகத்தின் மக்கள்தொகை தலைமைப் பதிவாளர் வெளியிட்டார். இந்த வெளியீட்டிற்குப் பின்னர் இறப்பு பதிவு, இறப்புச்சான்றிதழ் என அனைத்துக்கும் ஆதார் எண் அவசியமா என்ற குழப்பநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இதை உணர்ந்த மத்திய அரசு, மீண்டுமொரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதார் எண் இறப்புப் பதிவுக்கு அவசியமென்றும், இறப்புச் சான்றிதழ் பெற ஆதார் அவசியமில்லை என்றும் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement