Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆந்திர சாலை விபத்து: ஸ்பெய்ன் சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில், ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் உயிரிழந்தனர். 

ஆந்திரா விபத்து

அனந்த்புரம் பகுதியிலிருந்து புதுச்சேரிக்கு ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 13 பேர், வேனில் பயணம் செய்துகொண்டிருந்தனர். மதனப்பள்ளி - புங்கனூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அவர்கள் பயணித்த வேனும், கன்டெய்னர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு, திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. மேலும், படுகாயமடைந்த இருவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாகவும், அதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

ஆந்திரா விபத்து

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement