Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரக்‌ஷா பந்தன்: ராணுவ வீரர்களுக்கு 100 அடி நீள ராக்கி அனுப்பிய பள்ளி மாணவர்கள்!

ராணுவ வீரர்களுக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 100 அடி நீள ராக்கி ஒன்றை அனுப்பியுள்ளனர்.

ரக்‌ஷா பந்தன்

சகோதர பாசத்தைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பொதுவாக ரக்‌ஷா பந்தன் பண்டிகையின்போது பெண்கள், தங்கள் சகோதரர்களின் கைகளில் ராக்கி எனப்படும் கயிறு கட்டுவது வழக்கம். அந்தவகையில், ராணுவ வீரர்களுக்கு ரக்‌ஷா பந்தன் பரிசாக 100 அடி நீளமுள்ள ராக்கியை மொராதாபாத் பள்ளி மாணவர்கள் அனுப்பியுள்ளனர். இந்தியாவில் உள்ள பன்முகம் கொண்ட கலாசாரம், மதநல்லிணக்கம் ஆகியவைகள் குறித்த பதிவுகளுடன் நூறடி நீள ராக்கியைப் பள்ளி மாணவர்கள் தயாரித்துள்ளனர்.

பல்வேறு நிறங்கள் கொண்ட காகிதங்கள், துணிகள் உள்ளிட்டவைகள் மூலமாக அந்த ராக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 100 அடி நீள ராக்கி நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்ற நோக்கில் தயாரிக்கப்பட்டதாக மாணவர்கள் கூறினர். ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களைக் கௌரவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ராக்கி செய்து அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களுக்கு இந்த ராக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

- தினேஷ் ராமையா

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement