இந்தியாவுக்கு புதிய விளக்கமளித்த வெங்கைய நாயுடு

'ஒருங்கிணைந்த தேசிய வளர்ச்சி, அனைத்து இந்தியர்களுக்குமானது' என்று துணைக் குடியரசுத்தலைவராக வெற்றிபெற்றுள்ள வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். 


துணைக் குடியரசுத்தலைவர் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட வெங்கைய நாயுடு வெற்றிபெற்றார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்ட கோபால கிருஷ்ண காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். துணைக் குடியரசுத் தலைவராகப் பதவியேற்க உள்ள நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வெங்கைய நாயுடுவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அவர், 'நான் கர்நாடகாவின்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராஜ்யசபா உறுப்பினராக எனக்கு மூன்று முறை வாய்ப்பளித்துள்ளது. விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனை இந்திய ஜனநாயகம் துணைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியுள்ளது' என்றார். மேலும், இந்தியாவுக்கு அவர் புதிய விளக்கமளித்துள்ளார். அவர், INDIA என்பதை Integrated National Development Impacting All Indians என்று குறிப்பிட்டார். மேலும், சமமாக வளர்ச்சி பெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!