குஜராத் திரும்பிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்- மீண்டும் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர்

குஜராத் மாநிலத்தில், வரும் 8-ம் தேதி, மாநிலங்களவைக்கான உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக, காங்கிரஸ்  எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். மீதம் இருக்கும்  எம்.எல்.ஏ-க்களிலும் சிலர் கட்சி தாவலாம் என்று பேசப்பட்டது.  இதனால், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ-க்களைத் தாங்கள் ஆளும் மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் மாநிலங்களவைத் தேர்தலுக்குதான் நேரடியாக வந்து வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.

Gujarat MLA

இந்நிலையில் கடந்த 2-ம் தேதி, பெங்களூருவில் உறுபினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த தனியார் விடுதியில், வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு, தங்கவைக்கப்பட்டிருக்கும் உறுப்பினர்களைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்த கர்நாடக மாநில அமைச்சர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், நாளை குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வாக்களிப்பதர்க்காக, தற்போது குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அகமதாபாத் வந்தடைந்துள்ளனர். அங்கும் அவர்கள் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நாளான நாளைதான் குஜராத் வருவார்கள் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில், ஒரு நாள் முன்னதாகவே அவர்கள் குஜராத் வந்துள்ளனர். இத்தனை பரபரப்புகளுக்கும் இடையில் நாளை மாநிலங்களவைத் தேர்தல் நடக்கிறது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!