காஷ்மீர் பிரச்னையைத் தீர்க்க இந்தியா முயலவில்லை: பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை என்று பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் கவாஜா ஆசீப் தெரிவித்துள்ளார். 

KAWAJA

 

பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்ற ஷாகித் அப்பாஸி அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக கவாஜா ஆசீப் பொறுப்பேற்றார். நீண்டகாலமாக காலியாக இருந்த வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கவாஜா ஆசிப், பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவிவகித்தவராவார். இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பிரச்னைகள் குறித்து பேசிய அவர், காஷ்மீர் பிரச்னையில் தீர்வு காணப்பட்டால் மட்டுமே இருநாடுகளிடையே அமைதி நிலவும். இந்தியாவுடன் அமைதியான உறவை ஏற்படுத்திக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால், பிரச்னை தீர்ப்பதில் இந்தியா ஆர்வம் காட்டவில்லை. இந்தியா மட்டுமல்ல ஆப்கானிஸ்தானுடனும் நட்புறவையே பாகிஸ்தான் விரும்புகிறது. இந்த விவகாரத்தில் இந்தியாவிடமிருந்து ஒத்துழைப்பு கிட்டவில்லை. பாகிஸ்தான் எல்லைகளை எப்படிப் பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், எல்லைப்பகுதிகளின் அமைதியான சூழல் தொடர்ந்து நிலவுவதற்கு இந்தியாவுடனான காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது அவசியம் என்று கவாஜா ஆசீப் தெரிவித்தார்.   

-தினேஷ் ராமையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!