சுற்றுச்சூழலின் சகோதரன்... மரங்களுக்கு ராக்கி கட்டிய மக்கள்!

ரக்‌ஷா பந்தனையொட்டி உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மரங்களுக்கு ராக்கி கட்டினர். 

மரத்துக்கு ராக்கி கட்டிய மக்கள்

சகோதர பாசத்தை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் ரக்‌ஷாபந்தன் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சகோதரர்களுக்கு, பெண்கள் கைகளில் ராக்கி கயிறு கட்டி  அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேநேரம், மரங்களைச் சகோதரர்களாகக் கருதி அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உறுதி மொழியுடன் மரங்களுக்கு ராக்கி கட்டும் நிகழ்வும் நடந்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரை அடுத்த கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மரங்களைப் பாதுகாப்போம் என்ற உறுதிமொழியுடன் மரங்களுக்கு ராக்கி கட்டினர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் ’மரங்களை நடுவோம், சூழலியலைக் காப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ராக்கிக் கயிறுகளை மரங்களில் கட்டினர். பீகார் தலைநகர் பாட்னாவில் ரக்‌ஷா பந்தனைக் கொண்டாடிய அம்மாநில முதலமைச்சர்  நிதிஷ் குமாரும், மரத்துக்கு ராக்கி கட்டினார். 

-தினேஷ் ராமையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!