வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (08/08/2017)

கடைசி தொடர்பு:07:54 (08/08/2017)

காஷ்மீரில் ஊடுருவல் முறியடிப்பு: ஐந்து தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே, தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது இந்திய ராணுவம். அப்போது ஏற்பட்ட மோதலில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

மச்சில் என்ற இடத்தில், இந்திய எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயன்றபோது, ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. அப்போது, தீவிரவாதிகளின் ஊடுருவல் முறியடிக்கப்பட்டது. குறிப்பாக, ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். தீவிரவாதிகள் வைத்திருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

எல்லையில், தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அவ்வப்போது மோதல் நீடிப்பதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க