பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சர்... தேசத்துரோக வழக்கில் இளைஞர் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சர் வைத்திருந்த இளைஞர் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார்.

 
பதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த பப்லு கான் எனும் இளைஞர், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான புரொஃபைல் பிக்சரைக் கடந்த ஜூலை 22-ல் பதிவேற்றியுள்ளார். அவர் பதிவேற்றிய இந்தப் புகைப்படத்துக்கு எதிர்ப்புகள் கமென்ட்களாகக் குவிய, புகைப்படத்தை நீக்கியுள்ளார். ஆனால், சமூக வலைதளங்களில் பப்லுவின் புகைப்படம் வைரலாகியது. இதுதொடர்பாக பஜ்ரங்தள் அமைப்பினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரைத் தொடர்ந்து பப்லுவைக் கைது செய்த பதௌன் மாவட்ட  காவல்துறை, அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்தனர். ஃபேஸ்புக்கில் பிரபலமடைவதற்காகவே பாகிஸ்தான் தேசியக்கொடியுடனான புகைப்படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்ததாக விசாரணையின்போது பப்லு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், பதௌன் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தான் கொடியைப் பறக்கவிட்டதாக 60 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

- தினேஷ் ராமையா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!