வெளியிடப்பட்ட நேரம்: 18:54 (08/08/2017)

கடைசி தொடர்பு:18:54 (08/08/2017)

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமனம்!

உச்ச நீதிமன்றத்தின் 45-வது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். 

தீபக் மிஸ்ரா

தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஜே.எஸ்.கேஹர், கடந்த ஜனவரி மாதம் 4-ம் தேதி இப்பதவிக்கு  நியமிக்கப்பட்டார். அவர், 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்காலம் விரைவில் முடிவடைவதையொட்டி தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தீபக் மிஸ்ராவை தலைமை நீதிபதியாக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார். பாட்னா மற்றும் டெல்லி உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் தீபக் மிஸ்ரா.