கூவத்தூர் பாணிக்கு பலன்: குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றி!

குஜராத்தில் நடந்த மாநிலங்களவைத் தேர்தலில், காங்கிரஸின் அகமது பட்டேல் வெற்றிபெற்றுள்ளார்.

அகமது பட்டேல்


குஜராத் மாநிலத்திலிருந்து மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடம் காலியாக இருந்ததால், அந்த இடங்களுக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதேபோல, காங்கிரஸ் சார்பில் அகமது பட்டேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்.


இதனிடையே, அவர்களில் ஒருவரான பல்வந்த்சிங் ராஜ்புட்டுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அவருக்கும், அகமது பட்டேலுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.  இதனிடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுப்பதற்காக, அவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, நேற்று அங்கு மாநிலங்களவை பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. 


இதில், இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் வாக்கு செல்லாதவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், அகமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை, காங்கிரஸ் கட்சி கொண்டாடிவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!