போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: குஜராத் முதலிடம்!

'குஜராத்' என்ற ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை வைத்துதான், கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை முன்னிலைப்படுத்தியது பா.ஜ.க. குஜராத்தில் அந்தப் பிரச்னை இல்லை... இந்தப் பிரச்னை இல்லை... இந்தத் துறையில் குஜராத்தான் முதலிடம் என்று பல பட்டியல்களை வெளியிட்டனர்.

போலி ரூபாய் நோட்டு

கோப்புப்படம்

இந்நிலையில், 'போலி ரூபாய் நோட்டுகள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டத்தில் குஜராத்தான் முதலிடத்தில் உள்ளது' என்று மத்திய இணை அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளார்.


மத்திய இணை அமைச்சர் ஹன்சர் ஜி அஹிர் மக்களவையில், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு போலி ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல்செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, நாடு முழுவதும் ரூ.2.55 கோடி மதிப்பில் போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டன. அதிகபட்சமாக குஜராத்தில் ரூ.1.37 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மிசோரம்மில் ரூ.55 லட்சமும், மேற்கு வங்கத்தில் ரூ.44 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 9-ம் தேதி முதல் கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி வரையிலான நிலவரம் இது" என்று கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!