''அண்ணே... உங்க ஆளுக்குத்தான் ஓட்டு போட்டேன்'' - அமித் ஷாவிடம் 'வடிவேலு' பாணி அலப்பறை!

டிவேலு பட காமெடி போல, குஜராத் ராஜ்யசபா தேர்தலில் ஒரு கூத்து அரங்கேறியிருக்கிறது. இதன் காரணமாகவே, அகமது பட்டேல் மீண்டும் எம்.பி ஆகியிருக்கிறார்.

அமித் ஷா எம்.பி

குஜராத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவின் செயலாளர் அகமது பட்டேல்,  ஐந்தாவது முறையாக எம்.பி பதவிக்குப் போட்டியிட்டார். சமீபத்தில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குஜராத் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், அகமது பட்டேலுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம்  உள்ள 182 எம்.எல்.ஏ-க்களில், வகேலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் ராஜினாமா செய்தனர். மீதி 176 வாக்குகள் இருந்தன. ஓட்டுப்பதிவு தொடங்கும்போது, அகமது பட்டேலின் வெற்றிக்கு 45 வாக்குகள் தேவை என்ற நிலையில் இருந்தது.  

ஓட்டுப்பதிவு தொடங்கியதும், வகேலா ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இருவர் வாக்குச்சீட்டை அமித்ஷாவிடம் காட்டி,''அகமது பட்டேலுக்கு எதிராகத்தான் ஓட்டு குத்தியிருக்கேன். சரியா இருக்குதானு பார்த்துக்கங்கன்னு' வாக்குச்சீட்டைக் காட்டியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தேர்தல் கமிஷனிடம் வீடியோ ஆதாரங்களுடன் புகார்செய்தனர். தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறியதாக வகேலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் இருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டது. 

இதனால், ஒவ்வொரு வேட்பாளரும் 44 ஓட்டுகள் பெற்றால் வெற்றிக்குப் போதுமானது. பெங்களூருவில் முகாமிட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 42 பேரின் ஓட்டுகளும் ஒருங்கிணைந்த ஜனதா தள எம்.எல்.ஏ மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ ஒருவரின் ஓட்டும்  அகமது பட்டேலுக்கு கிடைத்தது. இதையடுத்து, அகமது பட்டேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். 

குஜராத் சட்டசபையில், காங்கிரஸ் கட்சிக்கு 57 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். ராஜினாமா செய்தவர்கள் போக 51 பேர். இதில், 6 பேர் மட்டும் மாறி வாக்களித்துள்ளனர். அதில், இருவர் ஓட்டு செல்லாததாகிவிட்டது. காங்கிரஸ் கட்சியிலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து ராஜ்யசபா எம்.பி-க்குப் போட்டியிட்ட பல்வந்த்சிங் ராஜ்புத் 38 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

வெற்றி பெற்ற அகமது பட்டேல், 'சத்யமேவ ஜெயதே' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!