சிறையில் தந்தையைப் பார்க்க வந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கதி! | MP: Bhopal Central Jail officials stamped seal on faces of two minors

வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (09/08/2017)

கடைசி தொடர்பு:12:26 (09/08/2017)

சிறையில் தந்தையைப் பார்க்க வந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறைச்சாலையில், தங்களது தந்தையைப் பார்க்க வந்த குழந்தைகளின் முகங்களில் சிறைத்துறை அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ரக்‌ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தந்தையைப் பார்க்க வந்த அந்தக் குழந்தைகளின் கன்னங்களில், நுழைவு அனுமதிக்கான சீல் அடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்தி, ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து, மத்தியப்பிரதேச மாநில மனித உரிமைகள் ஆணையம், மாநில சிறைத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து பேசிய போபால் மத்திய சிறைக் கண்காணிப்பாளர் தினேஷ் நர்காவே, ’ரக்‌ஷாபந்தன் தினத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறைக்கு வந்தனர். அனுமதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும்பொருட்டு அவர்களின் கைகளில் சீல் அடிப்பது வழக்கம். குழந்தைகளின் முகங்களில் சீல் அடிக்கப்பட்ட நிகழ்வு திட்டமிட்டு நடந்தது அல்ல. இந்த விவகாரம்குறித்து விசாரணை நடத்தப்படும்’ என்று அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்தியப்பிரதேச சிறைத்துறை அமைச்சர் குசும் மெஹ்தலே கூறியுள்ளார்.


[X] Close

[X] Close