வெளியிடப்பட்ட நேரம்: 18:05 (09/08/2017)

கடைசி தொடர்பு:18:05 (09/08/2017)

எஸ்யூவி-க்களின் விலை உயருகிறது! ஏன் தெரியுமா..?

ஜிஎஸ்டி வரி விதிப்புக்குp பின்னர், விலை குறைந்த சொகுசு மற்றும் எஸ்யூவி கார்களின் விலை செஸ் வரியால் உச்சம் தொடவுள்ளது.

எஸ்யூவி கார்


ஜிஎஸ்டி-யைப் பொறுத்தவரை கார் மார்க்கெட்டில் நான்கு வகைகள் உள்ளன. 4 மீட்டருக்குட்பட்ட சின்ன கார்; பெரிய கார்; ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார். இதில் பெரிய கார் என்பது எஸ்யூவியை மட்டும் குறிக்காது; பிரீமியம் செடான் காரையும் குறிக்கும். இன்ஜின் கொள்ளளவு மற்றும் நீள/அகலத்தை வைத்துதான் இதை வகை பிரிக்க வேண்டும். சின்ன காராக இருந்தால், 2.25 சதவிகிதமும் எஸ்யூவியாக இருந்தால் 12 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரியால் குறைந்திருந்திருந்தது.


இந்நிலையில், மோட்டார் கார்களுக்கான ஜிஎஸ்டி உடன் இணைந்து விதிக்கப்படும் செஸ் வரியை உயர்த்தலாம் என மத்திய அரசின் மறு ஆய்வுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதனால், 15% இருந்த செஸ் வரி தற்போது 25% ஆக உயர்த்தப்பட உள்ளது. சொகுசு மற்றும் எஸ்யூவி கார்களின் விலை குறைக்கப்படும்போது அது அரசுக்கு வருவாய் இழப்பையே தரும் என்பதால் சொகுசு கார்கள், புகையிலை, நிலக்கரி ஆகியவற்றின் செஸ் வரியை உயர்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது.