Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரயிலில் வெடிகுண்டு கண்டெடுப்பு!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலிருந்து மேற்குவங்க மாநிலம் ஹௌராவுக்கு இயக்கப்படும் அகல் தக்த் விரைவு ரயிலில், வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 


ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கிடைத்த தகவலை அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் அக்பர்கஞ்ச் ரயில் நிலையத்தில், அதிகாலை ஒரு மணி அளவில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டது. ரயிலின் பி3 பெட்டியின் கழிப்பறையில் இருந்த வெடிகுண்டைக் கைப்பற்றிய நிபுணர்கள், அதைச் செயலிழக்கச்செய்தனர். இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அந்த வெடிகுண்டுடன் வைக்கப்பட்டிருந்த கடிதத்தில், ’ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் கொல்லப்பட்ட தீவிரவாதி அபு துஜானாவின் மரணத்துக்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர் - இ- தாலிபான் அமைப்பைச் சேர்ந்த அபு துஜானா, கடந்த ஒன்றாம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித் பகுதியைச் சேர்ந்த அபுவின் தலைக்கு, பாதுகாப்புப்படையினர் ரூ.15 லட்சம் பரிசு அறிவித்திருந்தனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement