Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க- வடகொரியா போர் பதற்றம் எதிரொலி: சரியும் இந்தியப் பங்குச் சந்தை!

அமெரிக்கா- வடகொரியா இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.

இந்தியப் பங்குச்சந்தை


இன்று மாலை வர்த்தக முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 317.74 புள்ளிகள் வீழ்ந்து, 31,213 புள்ளிகளாக நிறைவடைந்தது. அதே வேளை, தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 109.45 புள்ளிகள் குறைந்து, 9,710 புள்ளிகளாகி நின்றது. சர்வதேச அளவில் நாடுகளுக்கு மத்தியில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகளால் உலகளாவிய சந்தையில் வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தற்போது இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே நிலவி வரும் அரசியல் பிரச்னைகளும் போர் பதற்றமும் தான் சர்வதேச வர்த்தகப் பாதையை வீழ்ச்சியை நோக்கித் திருப்பியுள்ளது. மும்பை பங்குச்சந்தை சரித்திர சாதனை உச்சத்தைத் எட்டிய சில நாள்களிலேயே இம்மாதிரியான வீழ்ச்சி வர்த்தகர்கள் மத்தியில் கலக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. இதனால் முதலீடுகள் அதிகளவில் குறைந்துள்ளதாக வணிகர்கள் கூறுகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement