நாடு முழுவதும் 27 லட்சம் பொறியியல் இடங்கள் காலி!

நாடு முழுவதும் 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் படிப்புக்கான இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) தெரிவித்துள்ளது.


ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 10,361. இந்தக் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட மாணவர் சேர்க்கை 37,01,366 இடங்கள். இவற்றில் 27 லட்சம் இடங்கள் காலியாக இருப்பதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் கடந்த 5 ஆண்டுகாலத்தில் 30 சதவிகிதத்துக்கும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள கல்வி நிறுவனங்களை மூட உள்ளதாக அனில் டி. சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்று வரும் இரண்டு நாள்கள் உலக கல்வி மாநாட்டில் பேசிய அவர், மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள கல்வி நிறுவனங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ’கல்வித் தரம் மற்றும் மாணவர் சேர்க்கை குறைவது போன்ற காரணங்களால் பொறியியல் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொறியியல் கல்லூரிகளை மூடும்போது விதிக்கப்படும் அபராதத்தையும் குறைத்துள்ளோம். பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு குறைவதைத் தடுப்பதற்காக தேசிய அளவில் மாணவர்களுக்கான ஸ்டார்ட்-அப் கொள்கை ஒன்றை ஏஐசிடிஇ உருவாக்கியுள்ளது’ என்று அவர் கூறினார்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!