வெளியிடப்பட்ட நேரம்: 20:36 (11/08/2017)

கடைசி தொடர்பு:20:36 (11/08/2017)

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 30 குழந்தைகள் பலி..! உத்தரப் பிரதேசத்தில் நடந்த துயரம்

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாக 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

கோப்புப்படம்


உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து கோரக்பூர் மாவட்ட நீதிபதி ராஜூவ் ரவுட்லா தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடத்தியவர், ஆக்ஸிஜன் பற்றாக்குறையின் காரணமாகத்தான் குழந்தைகள் உயிரிழந்தார்கள் என்பதை உறுதிசெய்தார். இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த மருத்துவமனையை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.