Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய ராணுவத்தில் விரைவில் ரோபோட்டுகள்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத செயல்பாடுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ரோபோட்டுகளை ஈடுபடுத்த ராணுவம் முடிவு செய்துள்ளது. 

ராணுவத்தில் 544 ரோபோட்டுகளை இணைப்பதற்கான அனுமதியை மத்தியப் பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் இந்த ரோபோட்டுகள் அனைத்தும் உள்நாட்டுத் தயாரிப்பாகவே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் அடர்ந்த வனப்பகுதிகளில் முகாமிட்ட ராணுவத்தினருக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட தேவையான பொருள்களை வழங்குவதற்கு இந்த ரோபோட்டுகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

மேலும், அடர்ந்த வனப்பகுதிகளில் கண்காணிப்புப் பணியை மேற்கொள்வதில் ரோபோட்டுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் ராணுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படைப்பிரிவில் ரிமோட் மூலம் இயக்கப்படும் டக்‌ஷ் (Daksh) என்ற வாகனம் தற்போது பயன்பாட்டில் இருக்கிறது. ராணுவப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், படிக்கட்டுகள் ஏறும் திறன் பெற்றது. வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யும் பணிகளிலும் ஈடுபடுத்தப்படும் டக்‌ஷ், 20 கிலோ வரை சுமந்துசெல்லும் வலிமை பெற்றது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement