Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சரத் யாதவ் பதவி பறிப்பு.. நிதிஷ் அதிரடி

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் பதவியிலிருந்து சரத் யாதவ் நீக்கப்பட்டார். 

சரத் யாதவ்


அவருக்குப் பதிலாக ஆர்.சி.பி. சிங் மாநிலங்களவைக் கட்சித் தலைவராக செயல்படுவார் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் மெகாபந்தன் கூட்டணியை முறித்த விவகாரத்தில் அக்கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் முன்னாள் தலைவர் சரத் யாதவ் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. பாஜக ஆதரவுடன் பீகாரில் ஆட்சியமைத்த நிதிஷ்குமாரின் செயல்பாடுகளை சரத் யாதவ் நேரடியாகவே விமர்சித்திருந்தார்.

இதுதொடர்பாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அவரது பாதையைத் தேர்வு செய்ய சரத் யாதவுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு என்று கூறியிருந்தார். இந்தநிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் பதவி சரத் யாதவிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close