ஹிமாச்சலபிரதேச நிலச்சரிவு : ஆறு பேர் பலி | 6 killed in Himachal pradesh landslide 

வெளியிடப்பட்ட நேரம்: 11:53 (13/08/2017)

கடைசி தொடர்பு:11:53 (13/08/2017)

ஹிமாச்சலபிரதேச நிலச்சரிவு : ஆறு பேர் பலி

ஹிமாச்சலபிரதேச மாநிலம் மாண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 

himachal pradesh

மாண்டி மாவட்டத்தில் உள்ள பதார் என்னும் பகுதியில் நேற்று நள்ளிரவு மிகப்பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவில் மண்டி-பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை 154 முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் சில வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு காரணமாக மண்டி-பதான்கோட்  தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க