இணையும் இந்திய- ரஷ்ய உறவு: சீனாவுக்கு எச்சரிக்கையா?

இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து அடுத்த மாதம் நடத்தவிருக்கும் கூட்டுப் போர்ப் பயிற்சி, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நடத்தப்படுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

இந்தியா- ரஷ்யா


சிக்கிம், அருணாச்சலப்பிரதேசத்தை ஒட்டியுள்ள சீன எல்லையில், கூடுதல் ராணுவப் படைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியா - சீனா இடையே 'டோக்லாம்' விவகாரம் தொடர்பாக கடந்த சில நாள்களாக போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது, கூடுதலாக சீனாவின் ராணுவப் படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சி மேற்கொள்ள உள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 10 நாள்களுக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டுப்போர் பயிற்சியில் இந்தியாவிலிருந்து முப்படைகளையும் சேர்ந்த 350 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டுப்போர் பயிற்சியில் போர்க்கால நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் பிரதமர் மோடியின் ரஷ்ய சுற்றுப்பயணத்தின் போது கையெழுத்தானது. எல்லையில் நிலவும் போர் பதற்றத்தினால் இந்தப் போர் பயிற்சி சீனாவுக்கு ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா விடுக்கும் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முப்படைகளும் ஒன்றிணைந்து அந்நிய நாடு ஒன்றின் கீழ் பயிற்சி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!