கூர்க்காலாந்து விவகாரம்: மம்தா தலையிட ராஜ்நாத் கோரிக்கை!

'கூர்க்காலாந்து விவகாரத்தில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலையிட்டு பேச்சுவார்த்தை வேண்டும்’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில், கூர்க்கா இன மக்கள் அதிக அளவில் வசித்துவருகின்றனர்.  அவர்கள், தனி மாநில உரிமை கேட்டுப் போராடிவருகின்றனர். இதனிடையே, போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியினர், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். காலவரையற்ற போராட்டம், கடையடைப்பு என இருந்துவந்த போராட்டத்தில், கூர்க்கா அமைப்பின் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதால், தீவைப்பு, கடை உடைப்பு என மக்கள் போராட்டம் கலவரமாக மாறியது.

இதைத்தொடர்ந்து, தற்போது டார்ஜிலிங் பகுதி போராட்டக்காரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் கூர்க்காலாந்து போராட்டம் மேலும் தீவிரமடையும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வன்முறைச் சம்பவங்கள் வலுத்துவருவதை தடுக்க வேண்டுமானால், அந்த மக்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜ்நாத் சிங் கூறுகையில், ‘டார்ஜிலிங் பகுதியில் நிலவும் போராட்டத்தை, போராட்டக்காரர்கள் வாபஸ் பெறுவதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். மேலும், ரேஷன் பொருள்கள், கேபிள் வசதி, இணையத் தொடர்பு போன்ற அத்தியாவசியத் தேவைகளை அரசு வழங்கிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!