ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை 12 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்! | 2-year-old rescued from borewell after 12 hours

வெளியிடப்பட்ட நேரம்: 12:21 (16/08/2017)

கடைசி தொடர்பு:12:21 (16/08/2017)

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை 12 மணி நேரத்துக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்!

ஆந்திராவில், ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தை, 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

andhra


ஆந்திர மாநிலம்  குண்டூர் அருகே, சந்திரசேகர் என்கிற 2 வயது ஆண் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தபோது, நேற்று மாலை ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. தகவல் அறிந்த கிராம மக்கள், குழந்தையை மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.


தீயணைப்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படைக்குத் தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ஆழ்துளைக் கிணற்றைச் சுற்றி பள்ளம் தோண்டினார்கள். கிராம மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர், இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 12 மணி நேர கடுமையான முயற்சிக்குப் பிறகு, இன்று காலையில் பத்திரமாக குழந்தை மீட்கப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தையின் உடல்நலம்குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றை மூடாமல் இருந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க