Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது!

கல்லூரி வகுப்புகள் தொடங்கிய முதல் மாதத்திலேயே மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசும், மாநில அரசும் கல்லூரிகளுக்கு கடிதம் எழுதி இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் ஏற்படும் கல்விச் செலவை குறைக்கும் வகையில் மாநில அரசும் மத்திய அரசும் கல்வி உதவித்தொகைக்காக நிறைய நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றன. 

கல்வி உதவித்தொகை

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர் மற்றும் பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. இந்த உதவித்தொகைக்கு, இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் குடும்ப  ஆண்டு வருமானமாக  2 லட்சம் ரூபாயும் மற்ற பிரிவினருக்கு 2.5 லட்சம் ரூபாய் இருக்க வேண்டும். 

இந்து மதத்திலிருந்து கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தால், அவரது ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாயாகவும், அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தால், அவரது குடும்ப வருமானம் இரண்டு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். 

தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் Self Supporting Programmes பாடப்பிரிவில் சேர்ந்திருந்தால், முழு கல்விக் கட்டண விலக்கு பெறலாம். இதற்கு, பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். 

தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடிப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் விடுதியில் தங்கி படிப்பதற்கு விடுதி உதவித்தொகை என்று வழங்கப்படுகிறது. விடுதி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்குக் குறைவாகவே இருக்க வேண்டும். 

பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தமிழக முதலமைச்சர் விருதுக்காகவும் விண்ணப்பிக்கலாம். இந்த விருதுடன் உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு வருமான வரம்பு எதுவும் கிடையாது. 

முஸ்லிம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர் மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு மத்திய அரசு Merit Cum Means based Scholarship வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெற, பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சமாக இருக்க வேண்டும். சிறுபான்மை வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்தவுடனேயே, உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களுக்கு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிலும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி 31.08.2017. 

பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு Central Sector Scheme Scholarship என்ற பெயரில் உதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த உதவித்தொகை இந்தியா முழுவதும் 80,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது கல்லூரியில் இளநிலை மற்றும் ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தவர்கள்  இந்த உதவித்தொகைக்கு உடனடியாக விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை பெற பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஆறு லட்சம் அல்லது அதற்குக் குறைவாக இருக்க வேண்டும். இவர்கள் மேலும் விவரங்களுக்கு http://www.scholarships.gov.in என்ற இணையத்தளத்தில் கூடுதல் விவரங்களைப் பெறலாம். இந்த உதவித்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் உதவித்தொகை வழங்குவதோடு, இளநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு ஆண்டுக்கு பத்தாயிரம் ரூபாய்க்கும், முதுநிலை பட்டப்படிப்பில் படிப்பவர்கள் ஆண்டுக்கு இருபதாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிக்கொள்ளவும் தனியே நிதி வழங்குகிறார்கள். இந்த உதவித்தொகைக்கு இளநிலை படிப்பில் சேர்ந்தவுடன் விண்ணப்பித்தால் முதுநிலை படிப்பு முடிக்கும் வரை உதவித்தொகை  கிடைக்கும். 

உடல் ஊனமுற்ற மாணவர்களுக்கு மத்திய அரசு மூன்று வகையான கல்வி உதவித்தொகை வழங்கிவருகிறது. தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான நிதி மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு உடல் ஊனமுற்றோர் பிரிவுக்கான மாணவர்களுக்கு தனியே உதவித்தொகை வழங்கிவருகிறது. இந்த உதவித்தொகையைப் பெற ஆண்டு வருமானம் மூன்று லட்சம் ரூபாய்க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

மேற்சொன்ன உதவித்தொகையைவிட ஒவ்வொரு கல்வி நிறுவனமும் தனிப்பட்ட முறையில் மாணவர்களுக்கு உதவித்தொகையை வழங்குகின்றன. இதைத்தவிர, பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் புகழ்பெற்ற அமைப்புகளும், அறக்கட்டளைகளுக்கும் உதவித்தொகை வழங்கி வருகிறார்கள். அனைத்து உதவித்தொகைக்கும் கல்வி நிறுவனத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கூடுதல் விவரங்களை கல்லூரி அலுவலகத்தில் கேட்டு அறிந்துக்கொள்ளலாம். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement