அடுக்கு மாடி வீடுகளாகும் புதுச்சேரி குடிசைகள்; பிரெஞ்சு தூதர் அறிவிப்பு | Puducherry huts are became build houses - French Ambassador

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (17/08/2017)

கடைசி தொடர்பு:08:44 (18/08/2017)

அடுக்கு மாடி வீடுகளாகும் புதுச்சேரி குடிசைகள்; பிரெஞ்சு தூதர் அறிவிப்பு

”புதுச்சேரியில் இருக்கும் 1,750 குடிசை வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றப்படும்” என்று பிரெஞ்சு துணைத் தூதர் கூறியிருக்கிறார்.

புதுச்சேரி

பிரான்ஸின் காலனி ஆதிக்க நாடாக இருந்த புதுச்சேரி 1962-ம் ஆண்டு விடுதலை அடைந்து இந்தியாவுடன் இணைந்தது. அதிலிருந்து பிரெஞ்சு மக்களும், பிரெஞ்சுக் குடியுரிமையைப் பெற்ற மக்களும் ஆயிரக்கணக்கில் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். அவர்கள் பிரான்ஸுக்குச் சென்று வர எளிதாக விசா கிடைக்கும் வகையில் புதுச்சேரியில் பிரெஞ்சு துணைத் தூதரகம் செயல்பட்டு வருகின்றது. அதில் துணைத் தூதுவராக இருந்த பிலிப் ஜான்வியர் காமியாமா கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற்றதையடுத்து, புதிய துணைத் தூதுவராக கேத்ரீன் ஸ்வாட் கடந்த 1-ம் தேதி பதவியேற்றார்.

முதல் முறையாக இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கேத்ரீன் ஸ்வாட், “விரைவில் சென்னையில் பிரெஞ்சுத் தூதரகத்தின் கிளை தொடங்கப்படும். புதுச்சேரியில் செயல்படுத்தவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 63 புதிய திட்டங்களை பிரெஞ்சு அரசு தொடங்க இருக்கின்றது. சுமார் 1,750 குடிசை வீடுகள் அடுக்குமாடிக் குடியிருப்புகளாக மாற்றப்படும். வரும் அக்டோபர் மாதம் முதல் இந்தியா முழுவதும் பிரெஞ்சுக் கலைவிழா நடத்தப்படும். இந்தியா-பிரான்ஸ் இரு நாடுகளின் நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக பிரெஞ்சு அரசு சார்பில் 2018 ஜனவரியில் படகுப் போட்டி நடத்தப்படவிருக்கின்றது" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க