Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபோர்டு ‘கார்டெஸி’ ட்ரைவ்: ஓட்டுநர்களுக்கான ஒரு பிரசாரம்!

சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை மட்டும் கடைபிடித்தால் போதாது. அதே சாலையில் நம்முடன் அதே போக்குவரத்துச் சிக்கல்களைச் சமாளித்து அருகே அல்லது எதிரே கடந்து செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களிடம் எவ்வாறு மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதும் ஒரு வகை ’சாலை நாகரிகம்’(Road manners). இந்தச் ‘சாலை நாகரிகம்’ குறித்த விழிப்புஉணர்வு பிரசாரம் ஒன்றை தற்சமயம் ஒருங்கிணைத்துள்ளது ‘ஃபோர்டு’ கார் நிறுவனம்.

ஃபோர்டு


இந்தப் பிரசாரத்தின் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படும் அம்சங்கள் குறித்து ‘ஃபோர்டு’ நிறுவனம் விளக்கமளித்துள்ளது. அதில், ‘சாலையில் பயணிக்கும் மற்றவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளுதல், வாகனம் ஓட்டும்போது ஏற்படும் கவனச் சிதறலைக் குறைத்தல், பாதசாரிகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளுதல், சாலையில் உள்ள விதிமுறைப் பலகைகளைக் கவனித்தல் ஆகிய அனைத்தும் சாலைப் பாதுகாப்புக்கு நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.

‘ஃபோர்டு’ நிறுவனம் இந்த ‘கார்டெஸி ட்ரைவ்’ பிரசாரத்துக்காக சில ஆய்வுகளை நடத்தியுள்ளது. அந்த ஆய்வு முடிவுகள், ‘சாலைப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி ஓட்டுநர்களைக் கவனம் சிதறச் செய்வது மொபைல் போன்கள்தான். இந்தியாவில் மட்டும் 42% ஓட்டுநர்கள் வாகனம் ஓட்டும்போதே செல்போன் பயன்படுத்துகின்றனர்’ எனக் கூறுகின்றன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement