Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருவநிலை மாறுபாடால் 64 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு!

பருவநிலை மாறுபாடால் ஆண்டுதோறும் இந்திய அரசுக்குத் தோராயமாக 64 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உலக அளவில் மனித குலத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது பருவநிலை மாறுபாடு. அதனால், இந்தியாவுக்கு ஆண்டுதோறும் 9 முதல் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விவசாயத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் வேளாண்துறை அமைச்சகம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது. பருவநிலை மாறுபாடு காரணமாக வெப்பநிலை அதிகரிப்பதால் வரும் 2100-ம் ஆண்டில் விவசாய உற்பத்தி 10 முதல் 40 சதவிகிதம் அளவுக்கு வீழ்ச்சியடையும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான தொழில்நுட்பங்களுக்கு விவசாயிகள், தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் நிலைக்கு நாடு தள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை நோக்கி விவசாயிகள் நகராவிடில், விவசாயத் துறையில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டு, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.   

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement