கொத்தடிமை முறைக்கு மறுப்பு: பெண்ணுக்கு நடந்த கொடூரம்! | Woman's nose cut in Madhya Pradesh for refused to work as bonded labourers

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (18/08/2017)

கடைசி தொடர்பு:19:00 (18/08/2017)

கொத்தடிமை முறைக்கு மறுப்பு: பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

மத்தியப்பிரதேசத்தில் கொத்தடிமையாகப் பணி செய்ய மறுத்த பெண்ணின் மூக்கை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொத்தடிமை முறை


பல்வேறு புதிய இந்தியாக்கள்  பிறந்ததாக அறிவிக்கப்பட்டாலும், கொத்தடிமை முறையை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டாலும், கொத்தடிமை கொடுமைகள் நாடு முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேசத்தில் கொத்தடிமையாகப் பணி செய்ய மறுத்த தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  நரேந்திர ராஜ்புட் மற்றும் சஹாப் சிங் ஆகியோர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.


ஜானகி தனுக் என்ற பெண்ணின் கணவரை முதலில் அவர்கள் தாக்கியுள்ளனர். இதையடுத்து, அந்தப் பெண் தன் கணவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணின் மூக்கை அந்த நபர்கள் வெட்டியுள்ளனர். இதில், பெண்ணுக்கு மூக்கில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில், அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச பெண்கள் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.