கொல்கத்தா போலீஸ்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்!

கொல்கத்தாவில் போலீஸ்களுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஹார்லி டேவிட்சன்


போலீஸ்களுக்கு பைக்குகள் வழங்கப்படுவது வழக்கம். தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்களில், போலீஸாருக்கு புல்லட்கள்தான் வழங்கப்படும். ஆனால், கொல்கத்தாவில் போலீஸுக்கு ஹார்லி டேவிட்சன் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹார்லி டேவிட்சனின் Street 750 மாடலை களமிறக்கியுள்ளது கொல்கத்தா போலீஸ். முதல் கட்டமாக ஐந்து பைக்குகள் வாங்கப்பட்டுள்ளன. ஒரு பைக்கின் விலை 5.5 லட்சம் ரூபாய்.

முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் இந்த பைக்குகள் பயன்படுத்தப்படும் என்று கொல்கத்தா போலீஸ் தெரிவித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த பைக்குகள் வாங்கப்பட்டிருந்தாலும் கடந்த சுதந்திரதினத்தின் போதுதான் பொது வெளிக்கு இந்த பைக்குகள் கொண்டுவரப்பட்டன.

கொல்கத்தா போலீஸில் தற்போது, ராயல் என்ஃபீல்டு பைக்குகள்தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், "ராயல் என்ஃபீல்டு பைக்குகளே தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் முக்கியமான சூழ்நிலைகளில் மட்டுமே ஹார்லி டேவிட்சன் பயன்படுத்தப்படும்" என்று கொல்கத்தா போலீஸ் தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!