எல்லையில் சீனா ஊடுருவல்: இந்தியா கடும் கண்டனம்!

இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றதற்கு இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

இந்தியா- சீன எல்லை

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது. 

இந்நிலையில், இந்திய- சீன எல்லைப் பகுதியான காஷ்மீரின் லடாக் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றுள்ளது. அப்போது தடுத்த இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியாவும் பதில் தாக்குதல் நடத்தியதில் இருதரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்துக்கு முதன்முறையாக இந்தியா அதிகாரபூர்வ கண்டனங்களை சீனாவுக்கு எதிராகத் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!