Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

துரோணாச்சார்யா விருது பட்டியலிலிருந்து மாரியப்பன் பயிற்சியாளர் பெயர் நீக்கம்!

துரோணாச்சார்யா விருது பட்டியலிலிருந்து, மாரியப்பன் பயிற்சியாளர் சத்தியநாராயணா பெயர் நீக்கப்பட்டுள்ளது. 

சத்தியநாராயணா பயிற்சியாளர்


ரியோ பாராலிம்பிக் போட்டியில், உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தினார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. 'தங்கமகன்' என்று அவருக்கு தமிழக மக்கள் பட்டம் சூட்டினார்கள்.  மாரியப்பனுக்கு ஏற்கெனவே பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீயை அடுத்து அர்ஜுனா விருதும் அவர் பெற இருக்கிறார். மேலும், மாரியப்பனின் வாழ்க்கை குறித்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறார்.  இதனிடையே, மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணா பெயர் துரோணாச்சார்யா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், துரோணாச்சார்யா விருது பரிந்துரை பட்டியலில் இருந்து மாரியப்பனின் பயிற்சியாளர் சத்தியநாராயணாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சத்தியநாராயணா மீது குற்றவழக்கு நிலுவையில் இருப்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் அர்ஜுனா விருதுக்கான பெயர் பட்டியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement