Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் ஐக்கிய ஜனதாதளம்!

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதற்கான தீர்மானத்தை, நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் நிறைவேற்றியுள்ளது. 


ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியுடனான கூட்டணியை ஜூலை 26-ம் தேதி நிதிஷ்குமார் முறித்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார், ஒரே நாளில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். பா.ஜ.க உறுப்பினர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளித்தார். இருப்பினும், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையாமல் இருந்துவந்தார்.

இந்த நிலையில், அவருக்கு பா.ஜ.க கூட்டணியில் இணையுமாறு அழைப்பு வந்திருந்தது. நிதிஷ்குமார் தலைமையில், அவரது இல்லத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக் கூட்டணியில் இணையவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement