வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (19/08/2017)

கடைசி தொடர்பு:19:40 (19/08/2017)

235 கோடி அபராதம் வசூலித்த ஸ்டேட் பேங்க்..!

வங்கிக் கணக்குகளில் குறைந்த அளவு இருப்புத் தொகை வைத்திருந்தவர்களிடமிருந்து மட்டும் பாரத ஸ்டேட் வங்கி, 235 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. 


கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 'எஸ்.பி.ஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடில், அபராதம் விதிக்கப்படும்' என்று அந்த வங்கி அறிவித்தது. அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப் பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்.பி.ஐ அறிவித்திருந்தது. இந்த நிலையில், சந்திரசேகர் கவுத் என்பவர் இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்தக் கேள்விக்கு, மும்பையைச் சேர்ந்த துணை மேலாளர் பதில் தெரிவித்துள்ளார். அவருடைய பதிலில் 388.74 லட்சம் வங்கிக் கணக்குகளிலிருந்து 235 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி வரையிலான காலாண்டில் மட்டும் 235 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.