அதிர்ச்சி வீடியோ: எல்லையில் இந்திய - சீன ராணுவம் மோதல் | Clash between India - China soldiers in ladakh

வெளியிடப்பட்ட நேரம்: 10:23 (20/08/2017)

கடைசி தொடர்பு:08:31 (21/08/2017)

அதிர்ச்சி வீடியோ: எல்லையில் இந்திய - சீன ராணுவம் மோதல்

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குக்குழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களை உடனடியாகக் குவித்தது. இதைத்தொடர்ந்து, இரு நாட்டு வீரர்களும் எல்லையில் குவிந்திருப்பதால் பதற்றம் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்திய - சீன ராணுவம் மோதல்


இந்நிலையில், லடாக் பகுதியில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன்படி, சுதந்திர தினத்தன்று, இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் நுழைய முயற்சித்துள்ளது. அப்போது, அவர்களை இந்திய ராணுவம் தடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் கற்களை வீசி தாக்குதல் நடத்துவதும், குத்துவதும், உதைப்பதும் போன்ற மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பிலும் சில வீரர்கள் இதில் காயமடைந்துள்ளனர்.

பின்னர் சீன ராணுவம், இந்திய எல்லைக்குள் நுழையும் முயற்சியை கைவிட்டது. கடந்த சில நாள்களுக்கு முன்புதான் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.