Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பா.ஜ.க முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

பாரதிய ஜனதா கட்சியினர் ஆளும் மாநில முதல் அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

மோடி

 

பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவில் 13 மாநிலங்களில் தலைமையேற்று ஆட்சி நடத்திவருகிறது. இந்த 13 மாநிலங்களிலும் பா.ஜ.க-வின் செயல்பாடுகள், வருங்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என முக்கிய விஷயங்கள்குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தை பிரதமர் மோடி தலைமையேற்று நடத்த உள்ளார்.

டெல்லியில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடியுடன் பா.ஜ.க-வின் தேசியத் தலைவர் அமித் ஷாவும் கலந்து கொள்கிறார். மேலும், 13 மாநிலங்களின் முதலமைச்சர்கள், ஆறு துணை அமைச்சர்கள், முக்கிய துறைகளின் அமைச்சர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளார்கள்.

பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் நடைபெறும் இந்த மூன்றாவது ஆலோசனைக் கூட்டத்தில், மேற்குறிப்பிட்ட 13 மாநிலங்களில் பா.ஜ.க செயல்படுத்திய முக்கியத் திட்டங்களை மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் விரிவாக சமர்ப்பிக்க உள்ளனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement