Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விசாரணைக்கு வரும் நீட் வழக்கு: நீதிபதிகள் குழுவில் மாற்றம்!

நீட் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், வழக்கை இதுவரை விசாரித்துவந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழுவில், ஒரு நீதிபதி மாற்றப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம்

 

இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினார்கள். இந்தத் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ இயக்குநரகம், முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே,  நீட் தேர்வில் வினாத்தாள்கள் வெவ்வேறு மாதிரியாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.  

இதையடுத்து, நீட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள்குறித்து பலரும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் 85 சதவிகித இடங்கள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கும்,  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 15 சதவிகித இடங்களும் ஒதுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், மாநில அரசின் இந்த அரசாணை செல்லாது என உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிப்பதற்கான அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இந்த அவசரச் சட்டம் தொடர்பான வழக்குதான், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இன்று, இந்த வழக்கில் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பதுகுறித்தும், நீட் ஆதரவு மாணவர்களின் வாதமும் கவனத்தில் ஏற்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நீட் விவகார வழக்கு இறுதி நிலையை எட்டவுள்ள சூழலில், விசாரணைக் குழுவிலிருந்த நீதிபதி ஒருவர் மாற்றப்பட்டுள்ளார். தீபக் மிஸ்ரா, அமித்தவா ராய், கான்வில்கர் ஆகியோர் கொண்ட குழுவில், தற்போது கான்வில்கருக்குப் பதிலாக, நீதிபதி குரியன் ஜோசப் இடம்பெறுவார் என உச்ச நீதிமன்றப் பதிவாளர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement