'25,000 ரூபாய் தருகிறேன், வெள்ளம் பாதித்த இடத்தில் மோடியின் படத்தைக் காட்டுங்கள்'- நடிகை ரம்யா காட்டம்!

ரம்யா

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ரம்யா கடந்த வருடம் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் நானூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததற்குப் போராட்டம் நடத்தினார். அவ்வப்போது  மத்திய அரசுக்கு எதிராக சில கருத்துகளைத் தன்னுடைய ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், மோடி அரசைப் பற்றி விமர்சித்துள்ளார்.

ramya


அதில், நான் உங்களுக்கு 25,000 ரூபாய் தருகிறேன். உங்களால் முடிந்தால், அசாம், குஜராத் அல்லது பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலாவது மோடி இருப்பதுபோல போட்டோக்களைக் காண்பியுங்கள் பார்ப்போம். போட்டோஷாப் இல்லாமல்' எனப் பதிவிட்டிருக்கிறார். அதற்குப் பலரும், 'காங்கிரஸ் கட்சி இருளில் இருக்கிறது அதற்கு உதவுங்கள், கடந்த 70 வருடங்களாகக் காங்கிரஸ் என்ன செய்திருக்கிறது' போன்று பலவிதமாகக் காங்கிரஸ் கட்சியையும், ரம்யாவையும் விமர்சித்திருக்கிறார்கள் அவரது ஃபாலோயர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!