Published:Updated:

அதிகாலை நேரம்; சகோதரியுடன் சென்ற 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெரு நாய்கள் - நாக்பூரில் அதிர்ச்சி

தெரு நாய்கள் ( கோப்புப் படம் )

மகாராஷ்டிராவில் தெரு நாய்கள் ஒன்றுசேர்ந்து கடித்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

அதிகாலை நேரம்; சகோதரியுடன் சென்ற 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற தெரு நாய்கள் - நாக்பூரில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் தெரு நாய்கள் ஒன்றுசேர்ந்து கடித்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Published:Updated:
தெரு நாய்கள் ( கோப்புப் படம் )

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அருகில் கடோல் என்ற சிறிய நகரத்தில் வீரஜ் ராஜூ என்ற 5 வயது சிறுவன் தன் குடும்பத்துடன் வசித்து வந்தான். அண்மையில் தன் சகோதரியுடன் காலை நேரத்தில் சிறுவன் வெளியில் சென்றிருக்கிறான். அதிகாலை நேரம் என்பதால் இருவரும் தெருவில் நடந்து சென்றபோது அதிகமான தெரு நாய்கள் அங்கு நின்று கொண்டிருந்திருக்கின்றன. இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் தெரு நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. தெரு நாய்கள் சுற்றி நின்று குரைக்க ஆரம்பித்ததும், சிறுவன் என்ன செய்வது என்று தெரியாமல் அழ ஆரம்பித்தான். உடனே சிறுவனை நாய்கள் கடிக்க ஆரம்பித்தன. அவனுடன் வந்த அவனின் சகோதரி நாய்களை விரட்ட முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உதவி கேட்டுக்கத்தினார். அதிகாலை நேரம் என்பதால் தெருவில் யாரும் இல்லை.

தெரு நாய்கள்
தெரு நாய்கள்
கோப்புப் படம்

அதையடுத்து, பதறிப்போன சிறுமி தன் பெற்றோரை அழைத்து வர ஓடினார். இதற்கிடையில் தெரு நாய்கள் சிறுவனைக் கடித்துக் குதறி அருகில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த இடத்துக்கு இழுத்துச் சென்று விட்டன. அனைத்து நாய்களும் ஒன்று சேர்ந்து கடித்ததில் சிறுவன் மயங்கி விழுந்தான். தகவலறிந்து சிறுவனின் பெற்றோர் ஓடி வந்தனர். நாய்களை அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் விரட்டியவர்கள், சிறுவனை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகம் தெரு நாய்களைப் பிடிப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் ஒவ்வொரு ஆண்டும் நாய்க்கடிக்கு 200 பேர் வரை உயிரிழக்கின்றனர். அதோடு ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 4 லட்சத்திற்கும் அதிகமானோர் நாய்க்கடியால் பாதிக்கப்படுவதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism