Published:Updated:

மும்பை: தீபாவளிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் மீது ராக்கெட்டுகளைவிட்ட வாலிபர்! | Video

ராக்கெட்விடும் வாலிபர்

தீபாவளியின்போது அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் வீட்டுக்கு ராக்கெட் பட்டாசுவிட்ட வாலிபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

மும்பை: தீபாவளிக்கு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் மீது ராக்கெட்டுகளைவிட்ட வாலிபர்! | Video

தீபாவளியின்போது அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசிப்பவர்கள் வீட்டுக்கு ராக்கெட் பட்டாசுவிட்ட வாலிபர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
ராக்கெட்விடும் வாலிபர்

தீபாவளிக்கு இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவுக்குப் பட்டாசு விற்பனை இருந்தது. இரவு நேரங்களில் பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், பலரும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நள்ளிரவு வரை பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் தங்களது தீபாவளியைக் கொண்டாடினர். மும்பையில் அது போன்று ஒருவர் தீபாவளியைக் கொண்டாடும்போது ராக்கெட் பட்டாசை அடுத்தவர்கள் மீதுவிட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டார்.

மும்பை அருகிலுள்ள உல்லாஸ் நகரில் வாலிபர் ஒருவர் அடுக்கு மாடிக் கட்டடம் ஒன்றின் கீழ்த்தளத்தில் நின்றுகொண்டு ராக்கெட் பட்டாசைக் கொளுத்தி அடுக்கு மாடிக் கட்டடத்தில் வசிப்பவர்கள் வீட்டை நோக்கி விட்டார். இதில் சில ராக்கெட் பட்டாசுகள் நேராக அடுக்கு மாடிக் குடியிருப்பில் வசித்தவர்களின் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் போய் தாக்கின. பட்டாசு பாக்ஸ் ஒன்றிலிருந்து ஒரே நேரத்தில் ஏராளமான ராக்கெட் பட்டாசுகளை (ஷாட்ஸ் வகை பட்டாசுகள்) அந்த வாலிபர் செலுத்தியதால் அந்தக் கட்டடத்தில் வசித்தவர்கள் அச்சத்தில் வீட்டைவிட்டு வெளியில் வந்து யார் இந்த வேலையைச் செய்வது என்று பார்த்தனர். ராக்கெட் வீட்டின் ஜன்னல் மற்றும் பால்கனியைச் சென்று தாக்கியது.

வீட்டைத் தாக்கிய பட்டாசு
வீட்டைத் தாக்கிய பட்டாசு

கீழே ஒருவர் கையில் ஷாட்ஸ் ரக பட்டாசுகளை வைத்துக்கொண்டு மாடி வீடுகளை நோக்கி ராக்கெட்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அதை ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது. ராக்கெட் பட்டாசுகளால் அச்சமடைந்த குடியிருப்புவாசிகள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் மர்மநபர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். ராக்கெட் பட்டாசு விட்டது யார் என்பது இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இது தவிர பட்டாசு சம்பவத்தால் தானேயில் 11 இடத்தில் தீ விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.