Published:Updated:

``மகளின் பெயரில் தந்தையின் குடும்பப்பெயர் கட்டாயமில்லை!" - டெல்லி உயர் நீதிமன்றம்

Court- Representational Image
Court- Representational Image ( Image by succo from Pixabay )

``உங்கள் மைனர் மகள் தன்னுடைய அம்மாவின் சர்நேமை தன் பெயருக்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிள்ளைகளின் பெயருக்குப் பின்னால், அப்பாவின் பெயரையோ அல்லது அப்பாவின் குடும்பப் பெயரையோ சேர்த்துக்கொள்வது உலகம் முழுக்க இருக்கிற வழக்கம்தான். பெயருக்கு முன்னால் போடப்படுகிற இனிஷியலும் அப்பாவுடைய பெயரின் முதல் எழுத்தாகத்தான் இங்கு இருந்து வருகிறது. அப்பா பெயரின் முதல் எழுத்துடன் அம்மா பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்துக்கொள்கிற பழக்கமே இப்போதுதான் நம் நாட்டில் வழக்கத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது.

இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ``தன் மகள் தன்னுடைய குடும்பப் பெயரைத்தான் (surname) அவளுடைய பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொள்ள வேண்டும்" என்று மனுத்தாக்கல் செய்திருக்கிறார் ஓர் அப்பா.

Delhi high court
Delhi high court
வரதட்சணைக்காக மனைவியைக் கொன்ற கணவர்; ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

நேற்றைய தினம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி முன்னிலையில், இந்த மனு விசாரணைக்கு வந்தது. மனுதாக்கல் செய்திருந்த நபர், ``என் மகள் ஒரு மைனர். குடும்பப்பெயரை சேர்த்துக்கொள்கிற விஷயத்தில் அவளால் சொந்தமாக முடிவெடுக்க முடியாது. என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்வதால், அவர்தான் என் மகளின் பெயருக்கு பின்னாலிருந்த எங்கள் குடும்பப் பெயரை நீக்க வைத்திருக்கிறார். என் மகளின் பெயரில் நான் எடுத்திருக்கிற காப்பீட்டில் என் `சர்நேம்’ தான் இருக்கிறது. அதை இப்போது மாற்றியிருப்பதால், காப்பீடு நிறுவனத்திடமிருந்து பணம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்" என தன்னுடைய வழக்கறிஞர் மூலம் வாதிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பேசிய நீதிபதி ரேகா பள்ளி, ``உங்களுடைய சொந்த மகளே என்றாலும், என் குடும்பத்துப் பெயரைத்தான் உன் பெயரின் பின்னால் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிட முடியாது. குழந்தைகளுக்கு அவர்களுடைய அம்மாவின் குடும்பப் பெயரைப் பயன்படுத்தவும் உரிமை உண்டு. உங்கள் மைனர் மகள் தன்னுடைய அம்மாவின் சர்நேமை தன் பெயருக்குப் பின்னால் மகிழ்ச்சியுடன் சேர்த்துக் கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Girl child
Girl child
Pixabay
`அதுவும் பாலியல் வன்புணர்வே!' - அதிரடி தீர்ப்புக்கு விளக்கம் அளித்த கேரள உயர் நீதிமன்றம்

இந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, ஒரு தந்தையாக மகளின் பள்ளிக்கூடப் பதிவுகளை அணுகுவதற்கான உரிமையை வழங்கி உத்தரவிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு